கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் மிகவும் மோசமடைந்து வருகின்றது.
கோவா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டடுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வந்தார்.அவர் சிகிச்சை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே நேற்றிரவு மனோகர் பாரிக்கரின் மீண்டும் உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மனோகர் பாரிக்கர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினால், புதிய முதலமைச்சராக தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை தேர்வு செய்யக்கோரி மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி கூறி வருகின்றது.