குட் நியூஸ் : இந்தியாவில் 400-க்கும் கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு..! 45,254 பேர் டிஸ்சார்ஜ்...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 374 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 374 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 8,071 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,11,74,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 374ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,482 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 45,254பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,06,130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 41,18,46,401 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.