மகிழ்ச்சி...இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

Happiness ... Less than 30,000 daily corona exposure in India again ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 276 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,78,786 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,36,78,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 276 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,47,194 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 29,621 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,31,972 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,99,620 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 86,01,59,011 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.