கனமழை... ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட கார்... 9 பேர் பலி.! ஒருவர் உயிருடன் மீட்பு..

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன்  பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன்  பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.

தற்போது கர்நாடகா,  கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி வருகின்றனர்.

அதில் உத்தரகண்ட் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அம்மாநிலத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள தேலா ஆற்றில் பெய்த கனமழை மழையினால் வெள்ளம் ஏற்பட்டு கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இந்த கார் அடித்துசெல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன்  பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார்.

இந்த கார் அடித்து செல்லப்பட்டதில் சுமார் 5 பேர் சிக்கியுள்ளனர் என்றும், ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்றும், இறந்த அனைவரையும் அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் டி.ஐ.ஜி பார்னே கூறினார்.