நேரு குடும்பத்தைஅவதூறாக பேசிய இந்தி நடிகை கைது.!

பிரபல நடிகை பாயல் ரோகத்கி இந்தியில் 20-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சில கருத்துகளை  கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வதேயே

ஜவகர்லால் நேரு, மோதிலால் நேரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி பாயல் ரோகத்கி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டார்.

இது தொடர்பாக  ராஜஸ்தான் போலீசார் நேற்று அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து  கைது செய்தனர்.

பிரபல நடிகை பாயல் ரோகத்கி இந்தியில் 20-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சில கருத்துகளை  கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வதேயே வழக்கமாக கொண்டு உள்ளார்.

சமீபத்தில் ஜவகர்லால் நேரு, மோதிலால் நேரு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி பாயல் ரோகத்கி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில்  ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சர்மேஷ் சர்மா என்பவர் பண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில்  போலீசார் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்சைக்குரிய வீடியோ குறித்து பதில் கொடுக்குமாறு பாயல் ரோகத்கிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

நடிகை பாயல் ரோகத்கி கடந்த வியாழக்கிழமை முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்தநிலையில் ராஜஸ்தான் போலீசார் நேற்று அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து  கைது செய்தனர்.

unknown node

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து வீடியோ வெளியிட்டதற்காக நான்  கைது செய்யப்பட்டுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் ‘டேக் செய்துள்ளார்.