கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் 3440 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,516 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 464 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3440 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2995 சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகாவில் நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்தியாவில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,86,579-ல் இருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,47,195 ஆகவும் உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025