அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி-கமலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கட்சி தொடங்கும் பிரகாஷ்ராஜ்

மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ் அவர்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம்  இறங்கினார்

மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ் அவர்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம்  இறங்கினார் .ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.மேலும் இதற்கு எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ள கமல் மிகப்பெரிய வரவேற்பை பெறுவார் என்று கூறியுள்ளார்.எனவே அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்றும்  பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.