இந்தியாவில் அதிமாக படித்தும், அல்லது இங்கு வேலை எதுவும் இல்லை ஆனால் உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களின் பெரும்பாலான தேர்வு வெளிநாடு செல்வதாக அமைந்துவிடுகிறது. இந்தியாவில் அதற்கான வேலைவாய்ப்புகளை அரசு அமைத்து தரவில்லை என கூறப்பட்டாலும் மக்களிடையே வெளிநாட்டு மோகம் குறைந்தபாடில்லை.
தற்போது, தனது தாய் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கையில்இந்தியாமுதலிடம் வகிக்கிறது. இதுவரை இந்தியாவில் இருந்து வேலைக்கு வெளிநாடு சென்றவர்கள்1 கோடியே 75 லட்சம்பேர் சென்றுள்ளனர். சென்றவருடம்1.59 கோடிபேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில்மெக்சிகோஉள்ளது. அங்கு இந்த வருட கணக்கின்படி,1 கோடியே 20 லட்சம்பேர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். 3ஆம் இடத்தில்சீனா. இங்கு1 கோடியே 10 லட்சம்பேர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர்.
அதேபோல இந்தியாவில் வந்து வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையானது, இந்தாண்டு51 லட்சத்து 50 ஆயிரமாகஉள்ளது. இதே எண்ணிக்கை 2015 ஆண்டு52 லட்சத்து 40 ஆயிரம்பேராக இருந்துள்ளது.