இந்திய கடற்படைக்கு புதிய வரவு! ஐ.என்.எஸ் கந்தேரி பற்றி தெரியாத விஷயங்கள் இவை…

Default Image

இந்திய கடற்படையில் தற்போது பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் தயாரான 1500 டன் எடை கொண்ட கல்வாரி ரக இரண்டாவது பிரம்மாண்ட நீர்மூழ்கி கப்பல் வந்து சேர்ந்துள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலானது 1500 டன் எடையும், 221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 50 நாட்கள் நீருக்குள்ளேயே பயணம் செய்ய முடியும். இது நீரின் மேற்பரப்பில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும், நீரின் உட்பகுதியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலானது பேட்டரி மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8 கடற்படை அதிகாரிகளும் 35 மாலுமிகளும் பயணம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கப்பலை நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த கந்தேரி என்னும் பெயர் மராட்டிய மன்னன் சிவாஜி, தான் வைத்திருந்த   தீவு நகருக்கு கந்தேரி எனும் பெயரில் இருந்ததால் அந்தப் பெயரில் தற்போது கப்பல் வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்