தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

திருமணம் முடிந்த 5 நாட்களில் இந்திய கடற்படை அதிகாரி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vinay Narwal

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று நாட்களே ஆன இளம் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் (26) என்பவர் உயிரிழந்தார். தேனிலவைக் கொண்டாடுவதற்காக காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்குகளுக்கு வந்திருந்த இந்த புதுமணத் தம்பதியின் கனவுகளை பயங்கரவாதிகள் கொடூரமாக நசுக்கிவிட்டனர்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆயுதங்களுடன் வந்த கும்பல், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தத் தாக்குதலில், கடற்படை அதிகாரி தீரமாக எதிர்கொண்டு போராடியபோதும், பலத்த காயமடைந்து வீரமரணம் அடைந்தார்.

இந்த இளம் கடற்படை அதிகாரி, தனது திருமணத்தை முடித்து, மனைவியுடன் காஷ்மீரின் இயற்கை அழகை ரசிக்க வந்திருந்தார். அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பறிக்கும் வகையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கணவன் இறந்த துக்கத்தில் அவருடைய மனைவி மன வேதனையுடன் கண்ணீர் ததும்ப அவருடைய பக்கத்தில் அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலருடைய மனதையும் உலுக்கியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இளம் கடற்படை அதிகாரியின் மனைவி பல்லவி, தாக்குதலின் போது பயங்கரவாதிகளிடம் உருக்கமாகவும், வேதனையுடனும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மனைவி ” என்னையும் கொலை செய்யுங்கள்” என்று கதறி அழுததாகக் கூறப்படுகிறது. அதற்கு பயங்கரவாதிகள், “நாங்கள் உன்னை கொல்ல மாட்டோம்! போய் உங்கள் மோடியிடம் சொல்லுங்கள்” என்று பதிலளித்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆங்கில ஊடகங்களும் சில நெட்டிசன்களும் இந்த தகவலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்