Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்...அரசியல் நிகழ்வுகள் வரை!

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்த தகவல்கள் கீழே நேரலை வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

PahalgamTerroristAttack live

சென்னை :ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும் அதில்,  20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்தார். இன்று (ஏப்ரல் 23, 2025) அதிகாலை அவர் இந்தியா திரும்பினார். அது மட்டுமின்றி, தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க உறுதியளித்துள்ளார்.