ஒரே ஒரு லைக் தான்! டிவிட்டரில் எதிர்ப்பையும் ஆதரவையும் சம்பாதித்த அக்ஷய் குமார்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் போலீசார் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுத்த டிவிட்டர் விடீயோவிற்கு அக்ஷய் குமார் லைக் தெரிவித்திருந்தார்.

அதனை குறிப்பிட்டு அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒளிந்திருப்பது போல ஒரு வீடியோ டிவிட்டரில் வெளியானது. அதற்க்கு அக்ஷய் குமார் டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து லைக்  செய்யப்பட்டிருந்தது.

unknown node

இந்த லைக்கை போட்டோ எடுத்து அக்ஷய் குமாருக்கு எதிராக #BoycottCanadianKumar என்கிற ஹேஸ் டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக அக்ஷய் குமார் ரசிகர்கள் #ISupportAkshay எனும் ஹேஸ் டேக் மூலம் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

unknown node

இதற்கிடையில் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ டிவிட்டரில் நான் உலாவி கொண்டிருக்கும் போது, தவறுதலாக லைக் பட்டன் அழுத்தப்பட்டுவிட்டது.  பின்னர் அந்த லைக்கை நான் நீக்கிவிட்டேன். இது போன்ற செயல்களை நான் வெறுக்கிறேன். ‘ என விளக்கம் கொடுத்துள்ளார்.