பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமரின் நிவாரண நிதி திட்டமானது பேரிடர் காலங்களில் அந்த நிவாரண நிதி திட்டங்களில் வந்த நிதியுதவியை கொண்டு நாட்டுமக்களுக்கு உதவி செய்யப்படும். இந்த திட்டம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.
இந்த பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்த ஆதாரம் என தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவையும், போட்டோவையும் பகிர்ந்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் பிரதமர் நிவாரண நிதி குழுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்துள்ளார். மேலும் அவரே, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் தலைவராக இருந்துள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றசாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது.
unknown node