#JustNow: ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு என தகவல்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு என தகவல்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்னர். மத்திய பிரதேஷ மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.  இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

unknown node