பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பெய்துவரும் கனமழையால், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த மழையால் பலர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கும்தா பகுதியில், வீட்டின் வாசலில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
unknown nodeஇதனையடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சிறிது நேரம் போராடி முதலையை பிடித்துள்ளனர். வெள்ளத்தில் அடித்து வரப்படும் முதலைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.