கேரள அரசு புதிய தடை!வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் நுழைய  தடை…..

By

கேரள அரசு அதிரடியாக,  குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் நுழைய  தடைவிதித்துள்ளது.

தமிழக அரசு, மலையேற்ற பயிற்சிக்காகன அனுமதி தொடர்பான விஷயங்கள் இன்னும் மேம்படுத்தியிருக்க

வேண்டும் என விமர்சனங்கள் ஒரு புறம் வந்துகொண்டிருக்க ,காட்டுத்தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சை பெற ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்த இந்த நிகழ்வு அண்டை மாநிலமான கேரளாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக கேரள அரசு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கேரள வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. மலை ஏற்றம் செல்பவர்கள், இயற்கை பயணத்தை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் இனி அனுமதி இல்லாமல் கேரள வனப்பகுதிக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அரசு எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023