சபரிமலை கோயில் விவகாரத்தில் கேரள அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது ...!ஆர்.எஸ்.எஸ்

சபரிமலை கோயில் விவகாரத்தில் கேரள அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது . சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கு

சபரிமலை கோயில் விவகாரத்தில் கேரள அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது .சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எற்க மறுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு வரவேற்றுள்ளது.இந்நிலையில்  சபரிமலை கோயில் விவகாரத்தில் கேரள அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது .மேலும்  பக்தர்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.