வயநாடு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்.!
கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மீன் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 128க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 400 குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன.