கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த 93 மற்றும் 88.! நம்பிகை நட்சத்திரமான வயதான வயதான தம்பதி.!

கேரளாவில் இதுவரை 295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொரோனா ஒரு வயதான தம்பதியையும் தாக்கியது. தற்போது அந்த

கேரளாவில் இதுவரை 295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொரோனா ஒரு வயதான தம்பதியையும் தாக்கியது. தற்போது அந்த வயதான தம்பதி கொரோனவை வென்று தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வந்த 93 வயதான தாமஸ் மற்றும் அவரது மனைவி 88 வயதான திரேஸம்மா ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, அவர்கள் கோட்டயும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை முடிந்து தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக இந்த வயதான தம்பதி மாறியுள்ளனர்.