சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் எதிர்த்து சிவசேனா நாளை கேரளாவில் முழுகடை அடைப்பை அறிவித்துள்ளது.
unknown nodeசபரிமலை அய்யப்பன் கோவிலில் பாரம்பரிய முறையை உடைத்து அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்குசிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து நாளை கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.இது குறித்து தெரிவித்த கேரள சிவசேனா தலைவர் பாரம்பரிய பழக்கவழக்கங்களை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது.இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை கண்டித்து இந்த கடை அடைப்பு போராட்டத்தை நடத்தப்படுவதாக கூறினார்.
DINASUVADU