வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு.!

கேரளா : தென்மேற்கு பருவமழை கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவில் வயநாடு சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர்.
மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சுமார், 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முண்டக்கை – சூரல்மலை இடையே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தை சேர்ந்த 225 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முண்டக்காய் நகரில் நள்ளிரவு 1 மணியளவில் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 4 மணியளவில் சூரல்மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், முகாமாக செயல்படும் பள்ளி, அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் வெள்ளநீர், சேறு சூழ்ந்தது. இதன் காரணமாக, மலைகளில் 150, ரிசார்ட்டில் 100 250 பேர் சிக்கித் தவிக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025