11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்...!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 11 பேரை  நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 11 பேரை  நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக  கூறி  11 தமிழக மீனவர்களை  இலங்கை கடற்படை கைது செய்து அவர்களிடமிருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.