தாமதமாகும் ரெமல் புயல்…வானிலை மையம் தகவல்!

ரெமல் புயல் : வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் வரும் 26-ஆம் தேதி வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த மே 23-ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. அதன் தன்பின் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காலை 08:30 மணி அளவில் மத்திய வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.
இந்த புயலுக்கு ரெமல் புயல் என்ற பெயரையும் வைத்து இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இந்த புயலானது, இன்று 25 -ஆம் தேதி மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக 25.05.2024 இரவு வலுப்பெற்று கரையை கடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில், புயல் கரையை கடக்க தாமதமாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (மே 26) நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும். இன்று இரவு தீவிரப் புயலாக மாறும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் சற்று தாமதமாகி நாளை (மே 26) காலை தீவிரப் புயலாக மாறி நள்ளிரவு வங்கதேசத்திற்கு அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 102 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் , இந்த புயலின் காரணமாக மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா, மிசோரம், திரிபுரா மற்றும் தெற்கு மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மே 26-27 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025