டெல்லியில் COVID-19 சோதனைக்கான முதல் மொபைல் ஆய்வகம் தொடக்கம்

COVID-19 சோதனைக்கான முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டள்ளது.
கோவிட் -19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது .இதனை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வதன் தொடங்கிவைத்தார். இந்த வாகனம் நாடுமுழுவதும் உதவிக்கு சிரமப்படும் அணைத்து பகுதிகளுக்கும் செல்லும். இந்த வாகனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆர்டி-பிசிஆர் சோதனைகள் / நாள், 300 எலிசா சோதனைகள் / நாள் மற்றும் டிவி, எச்.ஐ.விக்கு சோதனைகள் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஹர்ஷ் வதன் மேலும் கூறுகையில் நாங்கள் பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வகத்துடன் COVID-19 க்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினோம். இன்று நாடு முழுவதும் 953 ஆய்வகங்கள் உள்ளன. இந்த 953 இல் 699 இல் அரசு ஆய்வகங்கள் உள்ளன. தொலைதூர பகுதிகளில் சோதனை வசதிகளை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன, இறப்பு எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது.