இந்தியாவில் 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,576 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,576 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,81,965 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 2,334 ஆயிரம் குறைவாக உள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,98,81,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,576ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,86,713 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 87,619 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,66,009 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,29,243பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 27,66,93,572 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.