மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் சடலமாக மீட்பு...!

Two lovers from Rajasthan have been found dead hanging from a tree.

இராஜஸ்தானை சேர்ந்த காதலர்கள் இருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் எனும் மாவட்டத்தில் நேற்று திருமணமாகாத இளம் காதல் ஜோடிகள் இருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் சுமார் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் அவர்கள், புக்ராஜ் நாயக் மற்றும் லீலா நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசா ரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தான் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திங்கள் கிழமை இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், செவ்வாய்க்கிழமை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, போன மாதம் ஒடிசாவில் இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் உயிர் இழந்த காதல் ஜோடிகளின் மரணம் குறித்து இன்னும் சரியான காரணம் கண்டறியப்பட வில்லை எனவும், இது தற்கொலை மற்றும் தோல்வியுற்ற காதல் விவகாரம் மட்டுமல்லாமல் மேலும் இதில் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.