மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் 298 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 14,463 ஆக உயர்ந்தது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 2,39,755 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 59.84 சதவீதமாக உள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,46,129 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.