மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை மீட்கும் வகையில் பாகிஸ்தானுடன் போர் தொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார்.
அப்போது பாகிஸ்தானிடம் பலமுறை உறவுக்காகக் கைகொடுத்தாலும் அது எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். அதற்குப் பாடம் கற்பிக்கும் வகையில் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அந்தத் தாக்குதல் சாதாரணமாக இருக்கக் கூடாது என்றும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரைத் திரும்பப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அத்வாலே குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.