பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் கூட்டணிக்கான வியூகங்கள் அமைத்து வருகின்றனர்.குறிப்பாக அதிக பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் அனைத்து கட்சினரின் பார்வையாக உள்ளது.ஏனெனில் இங்கே வலுவான கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் சூழல் தொடர்ந்து நிகழ்வைதை நாம் அறிந்திருப்போம்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த முறை பாஜக_வை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சியும் , சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. மக்களின் நலனுக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து நாங்கள் இணைந்து செயல்பட முடிவு எடுத்து இருக்கின்றோம் என்று மாயாவதியும் , அகிலேஷ் யாதவ்_வும் கூட்டாக பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் எங்களின் கூட்டணி மூலம், மோடி மற்றும் அமித் ஷாவுக்கு இனிமேல் தூக்கம் வராது தெரிவித்தனர்.