தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை!

In Chhattisgarh, a mother and 5 children belonging to the same family fell in front of a train and committed suicide. Frustration caused by family problems is reported to be the reason for suicide.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண் குழந்தைகள் மற்றும் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விரக்தி தான் தற்கொலைக்கு காரணம் என தகவல்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பெண்ணொருவர் தனது ஐந்து பெண் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு சென்று மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரயில் வரும் நள்ளிரவு நேரத்தில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆறு பேர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் உடனடியாக கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரித்த போது உயிரிழந்த பெண் 45 வயதுடைய உமா எனவும், இவர் பெம்சா கிராமத்தை சேர்ந்தவர் எனவும் இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்பம் சண்டை ஏற்பட்டு வந்ததாகவுஜம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக தான் 10 வயது முதல் 18 வயதுடைய தனது 5 குழந்தை பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து உள்ளார் என தெரிய வந்துள்ளது. தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.