பள்ளிவாசலில் இந்து மத முறைப்படி திருமணம் நடத்திய இஸ்லாமியர்கள்...!

கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில்இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு கடந்த நவம்பர் மாதம் கடிதம் ஓன்று வந்தது.

சேரவல்லி பகுதியில் இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டி நேற்று பள்ளிவாசலில் இந்து முறைப்படியே ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என பதிவிட்டு உள்ளார்.

கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேரவல்லி பகுதியில்இருக்கும் மசூதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு கடந்த நவம்பர் மாதம் கடிதம் ஓன்று வந்தது. அந்த கடிதத்தில் கணவரை இழந்த பிந்து என்ற பெண் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஜமாத் கமிட்டி உதவவேண்டும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு,பிந்துவின் மகள் திருமணத்தை ஜனவரி 19-ம் தேதி அதாவது நேற்று நடத்தலாம் முடிவு செய்தனர்.அதன் படி பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும் , கயம்குளம் பகுதியைச் சேர்ந்த சரத் சசி என்பவருக்கும் ஜமாத் கமிட்டியின் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.

unknown node

இவர்களின் திருமணம் பள்ளிவாசலில் நடைபெற்றாலும் இந்து முறைப்படியே இந்தத் திருமணம் நடைபெற்றது. பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு பத்து சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் பரிசாகக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

unknown node

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் “கேரள மக்களின் ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முஸ்லிம் ஜமாத் மசூதி அஞ்சு & சரத் ஆகியோரின் இந்து மத திருமணத்தை நடத்தி வைத்துள்ளது. புதுமணத்தம்பதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், மசூதி நிர்வாகத்தினருக்கும், மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.