தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டரை தாங்கிய பா.ஜ.க. தொண்டர்கள்

This news gives information about Nationalist Congress Party-led NGO volunteers

இந்தியா முழுவதும்  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதியும் மற்றும் 2-வது கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

நேற்று 116 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் நடைபெற்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து  வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மக்களவை தொகுதியில்  பா.ஜ.க. சார்பில் பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பேரணியில்  சென்ற பொழுது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கருப்பு கொடி காட்டினார் என கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள்  போபால் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் அந்நபரை அடித்து உதைத்தனர். சம்பவத்தின்போது அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு சென்றனர்.