‘விலங்குகளை பேச வைப்பேன்!என்றுநித்தியானந்தா கூறியபுதிய வீடியோபரபரப்பை ஏற்படுத்தியது.
நித்தியானந்தா கூறிய போதுகுரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என்று தனது சீடர்களிடம் உரையாற்றினர்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
unknown nodeunknown nodeunknown nodeடெல்லி,
பரபரப்புக்கு பெயர் போன நித்தியானந்தா தற்போது புதிய கூற்றினை முன் வைத்துள்ளார். அதில் அவர் தன்னால் குரங்குகள், மாடுகள் மற்றும் சிங்கங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க முடியும் என்றார்.அவர் குரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என நித்யானந்தா தனது சீடர்களிடம் உரையாற்றும் கூறினார்.இந்த காட்சி அடங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
unknown nodeமேலும் அவர் கூறும் போது , குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு இருக்கும் உள்ளுறுப்புகள் கிடையாது. ஆனால், அவைகளுக்கு சில உணர்வுகளை அளிப்பதன் மூலம் அதனை மனிதர்களின் ஆற்றலுக்கு தகுந்தாற் போல மாற்றமுடியும். அந்த வகையில், விலங்குகளின் குரல் வளத்துக்கு காரணமான வோக்கல் கார்டு எனப்படும் தொண்டையின் உள்பகுதியை சரி செய்தால் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை பேச வைக்கலாம் என்பதை மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.
unknown nodeஇதற்காக நான் உருவாக்ககிய மென்பொருள் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் என்னால் விலங்குகளை பேச வைக்க முடியும் என நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். மனிதர்களைப் போலவே குரங்கு, மாடு, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளை இன்னும் ஓராண்டுக்குள் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் உங்களிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நான் பேசவைத்து காட்டுகிறேன் என நித்தியானந்தா தனது சீடர்களின் பலத்த கரகோஷங்கள் மத்தியில் கூறுகிறார்.இவரின் இந்த கூற்று பலரை ஆச்சரியமூட்டி வியப்படைய வைக்கிறது.இந்த வீடியோ தற்போது அளவுக்கதிகமாக ட்ரென்ட் ஆகி வருகிறது.
விலங்குகளை பேசவைப்பேன் என்று அவர் பேசிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
unknown node