"அரசியல் வேண்டாம் மகனே!" - CJP நிறுவனர் அபிஜீத் திப்கேவின் பெற்றோர் வேதனை!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு 2 கோடி பாலோயர்களைக் கடந்தது ஆதரவு பெருகி வருகிறது.

Hero Image

டெல்லி : கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என அழைக்கப்படும் “Cockroach Janata Party” சமூக வலைதளங்களில் தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த இணைய இயக்கத்தின் Instagram பக்கம் தற்போது 2 கோடி Followers-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலையின்மை, பணவீக்கம், போட்டித் தேர்வு அழுத்தம் மற்றும் இளைஞர்களின் மனநிலை போன்ற பிரச்சனைகளை நகைச்சுவை மற்றும் மீம்கள் மூலம் பேச ஆரம்பித்த இந்த இயக்கம், தற்போது இந்திய இணைய அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

“எல்லா கரப்பான்பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை காட்டுகிறோம்” என்ற வாசகத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக Gen-Z இளைஞர்கள் இந்த இயக்கத்தை அதிகமாக Follow செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கேவின் பெற்றோர் தற்போது கவலை தெரிவித்திருப்பது பேசுபொருளாக வெடித்துள்ளது. வெளியான தகவல்களின் படி, அபிஜீத்தின் அரசியல் பயணம் குறித்து அவரது பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. “எங்கள் மகன் அரசியலுக்கு வரவே கூடாது என்று நினைத்தோம். அரசியலில் அதிகமாக ஈடுபட்டால் சட்ட சிக்கல்கள், கைது மற்றும் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும்” என்ற பயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் என்பது தலைமைத்துவம் மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் துறையாக பார்க்கப்பட்டாலும், அதே நேரத்தில் அதில் அழுத்தம், சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களும் அதிகம் இருக்கும் என்பதால் பெற்றோர் கவலைப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பிரபலமான இந்த இயக்கம் தற்போது தேசிய அளவில் பேசப்படும் நிலைக்கு சென்றுள்ளதால், அபிஜீத் திப்கே மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தின் கவனம் அதிகரித்துள்ளது.

“Cockroach Janata Party” தற்போது தங்களை “வேலையில்லாத மற்றும் சோம்பேறி இளைஞர்களின் குரல்” என்று வர்ணித்துக் கொள்கிறது. ஆனால் அதன் பின்னால், இளைஞர்களின் மனஅழுத்தம், வேலைவாய்ப்பு பிரச்சனை மற்றும் சமூக அழுத்தங்களுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

இந்த இயக்கத்தின் வேகமான வளர்ச்சி, இந்திய இளைஞர்கள் தற்போது அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை Meme Culture மற்றும் Satire மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதற்கான புதிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.