வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா – தெலங்கானா.. ரூ.1 கோடி வழங்கிய என்.டி.ஆர்!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார் நடிகர் என்.டி.ஆர்.

Actor Jr NTR - Telangana flood

விஜயவாடா :கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தை அடுத்து, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

நன்கொடை அளித்த 1 கோடி ரூபாயில் இரு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார். சக நடிகர் விஷ்வக் சென்னும் ரூ.10 லட்சம் நன்கொடை அளித்து தனது ஆதரவை வழங்கினார்.

unknown node

கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.