மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை.!

மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியை நகரம் கொண்டாடுவதால் ஐஎம்டி கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியை நகரம் கொண்டாடுவதால் ஐஎம்டி கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மும்பை, தானே மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை மற்றும் தானேவுக்கு நாளையும்  கன மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 10 நாள் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மும்பை, பால்கர், தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்களில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மகாராஷ்டிராவின் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும்  என்று ஐஎம்டியின் மூத்த இயக்குனர் நேற்று தெரிவித்தார்.

மும்பையில் இன்று பிற்பகல் முதல் நகரம் முழுவதும் மேகமூட்டம் மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது என்று பிஎம்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆகஸ்ட் 25 வரை வடக்கு மகாராஷ்டிராவில் கடலுக்கு செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.