அபிநந்தனை டார்ச்சர் செய்த பாகிஸ்தான்!! வெளியான திடுக் தகவல்!!

Pakistani who made Abhinanthan torcher abhinandhanai torchar seitha pakistan

நேற்று  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் இருந்தபோது தம்மை  மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அபிநந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை  அழித்தது.அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது.

பின்பிப்ரவரி-27 ஆம் தேதிபாகிஸ்தான் விமானப்படை விமானமான  F16  இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை(விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்).

பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.பின்னர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.

unknown node

அதன்படி நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா்.இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

இந்நிலையில்  இன்று அபிநந்தன் மருத்துவசிகிச்சையில் உள்ளார்.தற்போது பாகிஸ்தானில் இருந்தபோது தம்மை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை என்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அபிநந்தன் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.