ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண்!!

பவன் கல்யாண் : ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார்.

Pawan Kalyan

பவன் கல்யாண் :ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார்.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியின் சார்பாக NDA கூட்டணியில் இணைந்து களம் கண்ட நிலையில், பவன்கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளை வென்று பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பவன் கல்யானுக்கு ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதிவு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரதமர் மோடி என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அதனை தொடர்ந்து, நேற்று தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன் கல்யாண்  தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் துறைகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த நிலையில், இன்று துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு தொண்டர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து செய்திகள் குவிந்து வருகிறது.

unknown node