உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தன்னை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கப்பட்ட இறுதித்தீர்ப்பை திரும்ப பெறக்கோரிய பேரறிவாளனின் மனுவை, தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் பேரறிவாளன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், ராஜீவ் படுகொலை வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
பேரறிவாளன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, அதனை நிராரிக்க வேண்டும் எனக் கோரியது. இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் பேட்டரி வாங்கி கொடுத்ததை விட கொலைச்சதியில் பேரறிவாளனுக்கு பங்கு உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். அரசின் வாதத்தை ஆட்சேபிக்க மனுதாரரான பேரறிவாளனிடம் ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குற்றவாளி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இது தொடர்பாக 4 வாரத்தில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.