“உள்ளூர் வீரர்களை எடுங்கள்! இல்லையெனில்… ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ!

Default Image

உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறினால் எங்களின் மாநகர பெயரான ஹைதரபாத்தை நீக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அவர்களின் உள்ளூர் வீரர்களுக்கு இடமளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். அந்தவகையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ தனம் நாகேந்தரும் அதிருப்தி தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் மாநிலத்தில் திறைமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வாய்ப்பு வழங்காமல் அவர்களை தேர்வின்போதும், ஏலத்தின்போதும் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்த சூழல் தொடர்ந்தால், கிரிக்கெட் போட்டியை அனுமதிக்கமாட்டோம் என்றும், உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறினால் எண்களின் மாநகர பெயரான ஹைதரபாத்தை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்