மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார். மற்ற அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் இந்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜெட்லி, வயது முதிர்வு காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று கடிதம் வாயிலாக பிரதமர் மோடிக்கு தனது கோரிக்கையை முன் வைத்து இருந்தார்.
இந்நிலையில் அடுத்த நிதியமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பாஜக தலைவர்கள் பியூஸ் கோயல், சுப்ரமணியசாமி போன்றோர் பெயர்கள் அடிபட்டன.
தற்போது இதில் திடீர் திருப்பமாக பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அவர்களின் பெயர் அடிபடுகிறது. அதாவது அமித்ஷா மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுகிறார். எனவே அவருக்கு முக்கிய பொறுப்புகள் பொறுப்புள்ள துறை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அந்தத் துறை நிதித்துறை ஆக இருக்கும் என பலர் கூறி வருகின்றனர்.
DINASUVADU