பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன், நாடறியும் உங்கள் சேவை தொடரட்டும் என வாழ்த்தியுள்ளார்.
unknown nodeமேலும், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்மாதிரியான தலைமை அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை தான் தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நீண்ட, ஆரோக்கிய மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுங்கள் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
unknown node