பெங்களூரில் பத்து வயது சிறுமி பலாத்கார வழக்கில் பாதிரியார் கைது!

62 year Priest Venkataramanappa has been arrested in connection with the rape of a 10-year-old girl in Bangalore.

பெங்களூரில் பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் வெங்கடராமணப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய தனது மகளை பார்ப்பதற்காக நேற்று 62 வயது கோயில் பாதிரியார் ஒருவர் சென்றுள்ளார். அப்பொழுது அந்த தெருவில் வசித்து வரக்கூடிய தம்பதியர்களின் 10 வயது சிறுமி அவரது மகள் வீட்டண்டையில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. அந்த சிறுமியை பார்த்த பாதிரியார் அவளிடம் பேசி தனது மகள் வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அதன் பின் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சிறுமியை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் தேட ஆரம்பித்த போது பாதிரியார் தனது மகள் வீட்டிற்குள் சிறுமியை அழைத்து சென்றதாக தெருவோரத்தில் பூ விற்கும் ஒருவர் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் அங்கு செல்ல அச்சிறுமியும் அழுதுகொண்டு வெளியில் வந்துள்ளார். சிறுமி நடந்ததை சொல்லவே, இது குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர், மேலும் அந்த பகுதியில் வாசிக்க கூடியவர்கள் பாதிரியார் இருந்த வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிரியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அருகிலிருந்த கடையிலுள்ள சிசிடிவி கேமராவிலும் அவர் சிறுமியை பேசி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளது பதிவாகியுள்ளது. தற்பொழுது சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.