”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!
கேரளத்தில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள முதல்வர் பினராயிவிஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த துறைமுகத்தால், சர்வதேச வர்த்தகம் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் வகையில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகள் மூலம் மாதத்திற்கு சுமார் 1 லட்சம் சரக்கு கண்டெய்னர்களை கையாள முடியும். நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமான இங்கே, கடந்த 3 மாதங்களாக பரிசோதனை முறையில் சரக்குகள் கையாளப்பட்டதில், 272க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் வந்து சென்றன.
இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் முக்கால்வாசி கப்பல்கள் இனி இங்கே வர வாய்ப்புகள் அதிகம். நாட்டின் இறக்குமதி, ஏற்றுமதிக்கு விழிஞ்சம் துறைமுகம் புது ஏற்றத்தை கொடுக்கும். இப்படி அதிக சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகம் உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்துவைத்து பின் மக்களிடம் உறையற்றிய பிரதமர் மோடி, விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
நீங்கள் இந்தியா கூட்டணியின் முக்கியமான தூண் என்று மேடையில் பினராயி விஜயனிடம் கூறிய பிரதமர் மோடி,
காங்கிரஸ் எம்.பி. சஷி தரூரும் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சி பலரின் தூக்கத்தை கலைக்கக் கூடியது” என்றும் கூறினார.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025