அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

'ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர்’ குறித்த நினைவு தபால்தலையும் வெளியிட்டார். இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் 28 ஆண்டுகளுக்குப்

‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர்’ குறித்த நினைவு தபால்தலையும் வெளியிட்டார்.

இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர்  பேசுகையில், பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிந்துவிட்டது, இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அவர் கூடியிருந்தவர்களை உரையாற்றத் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதைக் குறிக்கும் ஒரு தகடு ஒன்றை வெளியிட்டார்.மேலும்‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர்’ குறித்த நினைவு தபால்தலையும் வெளியிட்டார்.

unknown node