இன்று மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வருகிறது.இதில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.பாஜகவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் தெற்காசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளர்.