“வைபாவ்” என்ற மாநாட்டை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!

பிரதமர் நரேந்திர மோடி இன்று வைபாவ் என்ற புதிய மாநாட்டை திறந்து வைக்கிறார். இது, வெளிநாடு- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் ஒன்றிணைக்கும் தளமாக அமைகிறது.
இதில், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும், குடியுரிமை பெற்றவர்களையும் ஒரே மேடையில் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வைபாவ் என்ற மாநாட்டை திறந்து வைப்பார். மேலும், இந்த மாநாடானது அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், 55 நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இந்திய வம்சாவளி கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Looking forward to tomorrow’s Vaibhav Summit, which brings together scientists as well as researchers from the Indian diaspora.
Do join at 6:30 PM on 2nd October. pic.twitter.com/fvXxaDhT5q
— Narendra Modi (@narendramodi) October 1, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025