புதுச்சேரியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்தி லிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சபாநாயகர் வைத்தி லிங்கம் வெளியிட்ட அறிவிப்பில் சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவின் தொகுதியான தட்டாஞ்சாவடி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் புதுச்சேரி சபாநாயகர் வைத்தி லிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.