டெல்லியில் அனைத்துக்கட்சிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று முன்தினம் காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
unknown nodeஅப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
unknown nodeஇதன் பின் டெல்லியில் அனைத்துக்கட்சிகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.