டெல்லி :மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தனது பாட்டி இந்திரா காந்தி பற்றி காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்பு மற்றும் தைரியம் என இரண்டுக்கும் உதாரணமாக எனது பாட்டி (இந்திரா காந்தி) திகழ்கிறார். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி நடப்பதே உண்மையான பலம்என்பதை நான் அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். அவருடைய நினைவுகள் எனது பலம். அவை எப்போதும் எனக்கு வழிகாட்டுகின்றன.”என பதிவிட்டுள்ளார்.
unknown nodeடெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் இந்திராகாந்தி பிறந்தநாளில் அவரது நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
